search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாக்க மீண்டும் வாய்ப்பு"

    தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர். #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என எச்சரித்தனர்.



    “தாஜ்மகாலை பாதுகாப்பதற்கான பல்வேறு விஷயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; பசுமை திட்டத்தின் கீழ் கொண்டு வருதல், தாஜ்மகால் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், உணவுவிடுதிகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர். உத்தரபிரதேச மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கீல் ஐஸ்வர்யா பதி ஆகியோர் வாதிடும்போது, “ தாஜ்மகால் பாதுகாப்பு குறித்த தொலைநோக்கு ஆவணத்தை டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்லூரி தயாரித்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி வாதிடும்போது, “சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ஆகா கான் பவுண்டேசன், கலை மற்றும் கலாசாரத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை, நினைவுச்சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச கவுன்சில் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளிடம் இருந்து தாஜ்மகால் பாதுகாப்புக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. தாஜ்மகால் அமைந்து உள்ள ஆக்ரா நகரத்தை கலாசார நகரமாக அறிவிப்பது குறித்து ஒரு திட்டம் தீட்டி அனுப்புமாறு உத்தரபிரதேச மாநில அரசை கேட்டு இருக்கிறோம்” என குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #TajMahal #SupremeCourt 
    ×